நோன்புப்பெருநாள்: சிலாங்கூர் காவல்துறையில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே விடுமுறை அனுமதி

சிலாங்கூரில் 10 விழுக்காடு போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மட்டுமே இம்முறை நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்துடன் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்று, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர், டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

14,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதாவது 90 விழுக்காட்டினர் ரோந்து, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் குற்ற வழக்குகளை விசாரிப்பது உட்பட்ட பண்டிகைக் காலத்தில் பணியில் இருப்பார்கள் என்றார்.

“மேலும, பண்டிகைக் காலத்தில் பொது பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த ரோந்து நடவடிக்கைகள் இரட்டிப்பாக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர்களுக்கு பெரும்பாலானவர்கள் சென்றுவிடுவதால், குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பை உறுதிச்செய்ய Ops Selamat சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

“அந்தந்த கிராமங்களுக்குத் திரும்புவதற்கு முன், மக்கள் தங்கள் வீடுகள் முழுமையாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விபத்துகளைத் தவிர்க்க சாலையில் வாகனம் ஓட்டும்போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here