கெடா BN, PH மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள ஒற்றுமை குழுவை அமைத்தது

அலோர் செத்தார், பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) ஆகியவை இந்த ஆண்டு மாநிலத் தேர்தலுக்குத் தயாராவதற்கான ஒரு தளமாக Kedah Unity Leadership Councilஐ நிறுவ இன்று ஒப்புக்கொண்டன.

கெடா BN தலைவர் டத்தோஸ்ரீ மஹ்ட்சிர் காலிட், BN மற்றும் PH சபையின் கீழ் நான்கு குழுக்களை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன. அதாவது இருக்கைகள் ஆலோசனைக் குழு, தேர்தல் குழு, வியூகத் தொடர்புக் குழு மற்றும் அறிக்கைக் குழு.

கெடா PH தலைவராக டத்தோ மஹ்ஃபுஸ் ஓமர் மற்றும் மாநிலBN தலைவராக நானும் கூட்டாக மன்றத்திற்க்ய் தலைமை தாங்குவோம். ஒவ்வொரு குழுவிற்கும் இரு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டாகத் தலைமை தாங்குவார்கள் என்று அவர் இன்று BN-PH கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் ஒரு ஊடக சந்திப்பில் கூறினார்.

மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில், ஏப்ரல் 17ஆம் தேதி வட்டமேசை விவாதம் நடத்த பிஎன் மற்றும் PH தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக மஹ்ட்ஸிர் கூறினார்.

இட பங்கீடுகள் குறித்து, இரு கூட்டணிகளுக்கு இடையேயான விவாதங்கள் அமைக்கப்பட்டுள்ள கொள்கைகள் அல்லது கட்டமைப்பின் அடிப்படையில் தொடரும் என்று மஹ்ட்ஸீர் கூறினார்.

நாங்கள் ஏற்கனவே செய்து வருவதை மேலும் வலுப்படுத்த, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ரமலானின் போது கெடாவில் நோன்பு துறக்கும் நிகழ்விற்காகவும், ஹரிராயாவிற்கு பிறகு மற்றொரு நிகழ்விற்காகவும் கெடாவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மே 20 அன்று ஒரு ஒற்றுமை மாநாடு நடத்தப்படும் என்று மஹ்ஃபுஸ் கூறினார். இது அந்தந்த கட்சி இயந்திரத்தின் செயல்பாட்டை தீர்மானிக்கும். இதனால் மக்களை திறம்பட அணுக முடியும். மாநாடு முடிந்ததும், வெற்றிபெற இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை நம்மால் கணக்கிட முடியும்… ஒற்றுமையுடன், நாம் (மாநில அரசாங்கத்தை) கைப்பற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மலேசிய மதனிக்கு அடுத்தபடியாக கெடா மதனி இருக்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here