திங்கட்கிழமை காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

கடந்த திங்கட்கிழமை உள்ளூர் மீனவர் ஒருவர் சென்ற படகு, 447 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சோங் ஜெரிஜிஹ் அருகே கடலில் மூழ்கியதில் காணாமல் போன வோங் பாக் வெய் (30) என்பவரின் உடலை மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினர் இன்று காலை கண்டுபிடித்துள்ளனர்.

தஞ்சோங் மானிஸ் கடல்சார் மண்டல இயக்குனர், Gilbert Tingkak Numpang கூறுகையில், கூச்சிங் கடல்சார் மீட்பு துணை மையத்திற்கு நேற்று இரவு 8.55 மணியளவில், பாதிக்கப்பட்ட வோங்கின் தந்தையிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர்கள் மூழ்கிய படகை உயர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, படகின் வீல்ஹவுஸில் ஒரு சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.

“காலை சுமார் 9.25 மணியளவில், மீட்புக் குழு மற்றும் டைவ் குழுவினர் அந்த இடத்தை அடைந்து, சடலம் மேற்பரப்பில் மிதப்பதைக் கண்டனர்.

நெருங்கிய உறவினர்களின் முதற்கட்ட அடையாளத்தின் அடிப்படையில், அது வோங் பாக் வெய்யின் உடல் என்பதை உறுதிப்படுத்தினர், ”என்று அவர் கூறினார்.

பின்னர் மேல் நடவடிக்கைக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் வோங் காணாமல் போனதாகவும், அவருடன் மேலும் ஐந்து பணியாளர்கள் குறித்த படகில் இருந்தனர் என்று முன்னர் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here