ஹரிராயாவை முன்னிட்டு ஏப்ரல் 19 அன்று கூடுதல் பள்ளி விடுமுறை – ஃபத்லினா

ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 19 (புதன்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளுக்கும் கூடுதல் விடுமுறை அளிக்க கல்வி அமைச்சகம் (MOE) ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து அமைச்சர் ஃபத்லினா சிடெக் அறிவிப்பில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், குறிப்பாக பிற மாநிலங்களில் பணிபுரிபவர்கள் ஹரிராயாவை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஏப்ரல் 19 அனைத்து MOE உறுப்பினர்களுக்கும் சிறப்பு விடுமுறையாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவிக்க விரும்புகிறோம். எனவே அந்த நாளில் பள்ளி அமர்வு இருக்காது. அனைத்து கருத்துக்களையும் நாங்கள் பரிசீலித்துள்ளோம், இது ஆசிரியர்கள் மற்றும் அமைச்சக உறுப்பினர்களுக்கு அவர்களின் பயணத்தைத் திட்டமிடுவதற்கான வசதியை வழங்குவதாகும் என்று அவர் இன்று MOE இன் ஒருமைப்பாடு மன்றம் மற்றும் ஊழல் இல்லாத உறுதிமொழிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

2023/2024 அமர்விற்கான கல்வி நாட்காட்டியின் அடிப்படையில், குரூப் ஏ மற்றும் பியில் உள்ள மாநிலங்களுக்கான ஹரிராயாவடன் இணைந்து பள்ளி விடுமுறைகள் ஏப்ரல் 20 (வியாழக்கிழமை) தொடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here