முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் (MITI) தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் சிலாங்கூர் அம்னோவின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற மாநில அம்னோ இணைப்புக் குழுவின் முதல் கூட்டத்தில், மாநில அம்னோ தொடர்புச் செயலாளராக டத்தோ அப்துல் முத்தலிஃப் அப்துல் ரஹீமையும், மாநில அம்னோ தகவல் தொடர்பு தலைவராக டத்தோ டாக்டர் முகமட் ஜைடி எமுகமட் ஜைனையும், அதன் தலைவரான டத்தோ மெகாட் சுல்கர்னைன் ஒமர்டின் நியமித்தார் என்று, சிலாங்கூர் அம்னோ தொடர்புக் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.