ஏப்ரல் 10 ஆம் தேதி நிலவரப்படி, நோன்புப்பெருநாளுடன் இணைந்து பட்டாசுகளை விற்பனை செய்வதற்கான 50 விண்ணப்பங்களை பகாங் காவல்துறை நிராகரித்துள்ளது என்று, மாநில காவல்துறைத் தலைவர், டத்தோஸ்ரீ ராம்லி முகமட் யூசூப் தெரிவித்தார்.
பட்டாசு விற்பனை தொடர்பில் பெறப்பட்ட 424 மொத்த விண்ணப்பங்களில் 340 அங்கீகரிக்கப்பட்டது, மேலும் 34 இன்னும் அனுமதி வழங்குவதற்கான செயல்பாட்டில் உள்ளன என்கிறார்.
“குறித்த விண்ணப்பங்கள் நிராகரிப்பதற்கான காரணங்களாக, விண்ணப்பதாரர்கள் குற்றவியல் பதிவுகள் கொண்டிருப்பது, ஏனைய அதிகார தரப்பினரிடமிருந்து ஆதரவு கடிதம் இல்லாதது, பொருத்தமற்ற விற்பனை இடம் மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள்,” போன்றவை அடங்கும் என்று அவர் கூறினார்.
“விண்ணப்பதாரர் இணையத்தின் மூலம் பட்டாசு மற்றும் பட்டாசு சார்ந்த பொருட்களை கையாள்வது அல்லது அவர்களில் யாராவது அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பொருட்களை சேமித்து வைத்திருந்தால் அந்த விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்,” என்று அவர் நேற்று இரவு குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.









