மலேசிய இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில் இன அடிப்படையில் எந்த ஒதுக்கீடும் இல்லை என்கிறார் தோக் மாட்

மலேசிய ஆயுதப் படைகான இராணுவத்தின் ஆட்சேர்ப்புக்கு எந்த இன ஒதுக்கீட்டையும் இதுவரை நிர்ணயித்ததில்லை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் கூறினார்.

ஆண்டுக்கு இரண்டு முறை 6,000 முதல் 7,000 இராணுவ உறுப்பினர்களை உள்ளடக்கி ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“நாங்கள் ஒருபோதும் இனத்தின் அடிப்படையில் ஒதுக்கீட்டை விதிக்கவில்லை. ஆனாலும் தேசிய இராணுவத்தில் பூமிபுத்திரா அல்லாதவர்களின் சதவீதம் மிகக் குறைவு என்று, இன்று விஸ்மா பெர்தஹானனில் நடைபெற்ற 2023 நோன்புப் பெருநாள் நன்கொடை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் ஆயுதப்படையில் பூமிபுத்திரரல்லாதவர்களை உள்வாங்கும் பொருட்டு , நாடு முழுவதும் இணையம் வாயிலான விண்ணப்பங்கள் மற்றும் கண்காட்ச்சிகள் உட்பட அவர்களை ஈர்க்கும் வகையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்.

“இருப்பினும் அவர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் வகையில் பதில் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here