மனிதவள அமைச்சர் சிவகுமாரின் உதவியாளர் எம்ஏசிசியால் கைது

பெட்டாலிங் ஜெயா: மனிதவள அமைச்சர் வி சிவக்குமாரின் உதவியாளர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ளார். சிவக்குமாரின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான உதவியாளர், வெளிநாட்டு பணியாளர் ஆட்சேர்ப்பு முகவருடன் கைது செய்யப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இதற்கிடையில், அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்டதை எம்ஏசிசி தலைமை ஆணையர் அசம் பாக்கி தி வைப்ஸிடம் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here