பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பினாங்கு மற்றும் கெடாவிற்கு ஒரு நாள் பணி நிமிர்த்தமான பயணத்தை தொடங்கினார்.
இன்று காலை 10.30 மணிக்கு, பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய பிரதமரை, மாநில முதல்வர் சோவ் கோன் இயோவ் மற்றும் பிற மாநில உயரதிகாரிகள் வரவேற்றனர்.
இப்பயணத்தின்போது அன்வார், புக்கிட் மெர்தஜாமிலுள்ள கம்போங் மெங்குவாங் தித்தி மசூதியின் மேம்பாட்டினை கண்காணித்ததுடன், தாசெக் கெலுகோரில் உள்ள ஜராக் அத்தாஸ் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொண்டார்.
பின் மாரா டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் பினாங்கு கிளைக்கு (UiTM) செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு அவர் கூட்டாட்சி மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய உரையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, அத்துடன் பினாங்கு மாநில அரசாங்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுடன் மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கெடாவின் சுங்கைப்பேட்டையில் உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார், பின்னர் பினாங்கில் உள்ள இபாதுர்ரஹ்மான் மசூதியில் இரவு இஸ்யாக் மற்றும் தாராவிஹ் தொழுகையை நிறைவேற்றிய பின் கோலாலம்பூருக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.