வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பான ஊழல் விசாரணை தொடர்பாக மனிதவளத்துறை அமைச்சர் வி சிவகுமாரின் பெண் செயலாளரை எம்ஏசிசி கைது செய்துள்ளது.
எம்ஏசிசி தலைவர் அசாம் பாக்கியை தொடர்பு கொண்டபோது, சிவகுமாரின் தனிச் செயலாளர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை உறுதி செய்தார். தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் எத்தனை நாட்கள் என்று எனக்குத் தெரியவில்லை என்று அசாம் மலேசியாகினியிடம் கூறினார். புத்ராஜெயாவில் உள்ள அமைச்சகத்தில் சிவக்குமாரின் மூத்த அதிகாரியை எம்ஏசிசி கைது செய்த ஒரு நாள் கழித்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.









