சூடானில் வன்முறை; அங்குள்ள மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் -வெளியுறவு அமைச்சகம்

சூடானின் ஆயுதப் படைகளுக்கும் துணை ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 15) ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, சூடானின் நிலைமையை மலேசிய வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

சூடானின் கார்டூமில் நகரின் சில பகுதிகள் தொடர்ந்து அமைதியின்மையை நிலவுவதாக அங்குள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்துகிறது என்று, வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சூடானில் உள்ள மலேசிய தூதரகத்தின் அடிப்படையில், பதிவுசெய்யப்பட்ட 29 மலேசியர்களும், அவர்களில் பெரும்பாலும் மாணவர்கள், இவர்கள் அனைவரினதும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தூதரகம் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது மற்றும் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது” என்றும் அது கூறியது.

சூடானுக்குச் செல்லத் திட்டமிடும் அனைத்து மலேசியர்களும் நிலைமை சீராகும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு அமைச்சகம் கடுமையாக அறிவுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here