ஜோகூரில் இன்று நண்பகல் வரை போக்குவரத்து சீராகவுள்ளது – காவல்துறை

நாளை நோன்புப்பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று மதியம் வரை ஜோகூர் சாலைகளில் பெரிய நெரிசல் ஏதுமின்றி போக்குவரத்து சீராக நகர்கிறது என்று, மாநில போக்குவரத்து காவல்துறை தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) நண்பகல் வரை எந்த பெரிய விபத்துகளும் ஏற்படாமல் ஜோகூர் காஸ்வே மற்றும் இரண்டாவது இணைப்பு சாலை மற்றும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை ஆகியவற்றில் வாகனங்கள் சீராக நகர்வது போல் தெரிகிறது என்று அவர் கூறினார்.

இருப்பினும் “ஏப்ரல் 18 மற்றும் 20 க்கு இடையில் ஜொகூரின் சில சாலைகளில் நெரிசல்கள் பதிவாகியுள்ளன, ஏனெனில் அந்த தேதிகளில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியிருந்தனர். இருப்பினும், இன்றைக்கு, போக்குவரத்து சீராக இயங்குவதாகத் தெரிகிறது, இதற்குக் காரணம் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர் என்றார்.

மாநிலம் முழுவதும், குறிப்பாக நெரிசல் ஏற்படக்கூடிய 47 இடங்கள் மற்றும் விபத்து ஏற்படக்கூடிய 27 பகுதிகள் என இனங்காணப்பட்ட பகுதிகளில் மொத்தம் 689 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று குமரேசன் தெரிவித்தார்.

“இன்று பெரிய விபத்துக்கள் ஏதும் நடந்ததாக எங்களுக்கு இன்னும் அறிக்கை வரவில்லை. எவ்வாறாயினும், நேற்று (மே 20) மூன்று விபத்துகளில் இறப்புகள் பதிவாகியுள்ளன, இதில் இரண்டு மெர்சிங்கிலும் ஒன்று ஜோகூர் பாருவிலும் பதிவாகின.

“சாலையில் பயணிப்பவர்கள் பொறுமையாக இருக்கவும், சாலை விதிகளை எப்போதும் கடைபிடிக்கவும் நான் நினைவூட்ட விரும்புகிறேன். தூக்கத்தில் வாகனம் ஓட்டாமல் இருப்பதும் மிக முக்கியம், பயணத்தைத் தொடரும் முன் நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here