நோன்புப் பெருநாள் தொழுகைக்கு பள்ளிவாசல் சென்ற மூதாட்டி சரிந்து விழுந்து உயிரிழந்தார்

இன்று தந்தோப் பெசார் மசூதியில் ஹரி நோன்புப்பெருநாள் தொழுகையை நிறைவேற்ற சென்றிருந்த ஒரு வயதான பெண், திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

சம்பந்தப்பட்ட 75 வயது பெண் மேலதிக சிகிச்சைக்காக கோலா நெராங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் உறுதிப்படுத்தினார் என்று பாடாங் தெராப் மாவட்ட காவல்துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் முல்கியாமன் மன்சார் கூறினார்.

“அவரது மகனின் சாட்சியத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இதய நோய் உள்ளது என்று அறிய முடிகிறது. இருப்பினும், அவரது மரணம் குற்றவியல் கூறுகள் எதனையும் உள்ளடக்கவில்லை,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here