கிள்ளான் பள்ளத்தாக்கின் சில இடங்களில் திடீர் வெள்ளம்

இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுதுள்ளதுடன் பலத்த காற்றினால் பல மரங்கள் விழுந்தன என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் மோர்னி மாமட் கூறினார்.

குறிப்பாக ஜாலான் ஜெட் ஹில்- சுங்கை சுவா, காஜாங் ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இவ்வெள்ளப்பெருக்கு மாலை 6.15 மணியளவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது, அப்போது சாலை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், அப்பகுதியைக் கடக்க முயன்றபோது பலர் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.

மேலும் ஜாலான் செராஸ் ப்ரிமா, தாமான் சுதேராவில் சாலைதடுப்பில் மரம் விழுந்து போக்குவரத்தும் தடைப்பட்டது.

“காஜாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு வாகனங்களில் சிக்கிய பாதிக்கப்பட்டவர்களை மீட்க குறித்த இடத்திற்கு விரைந்தது.

மேலும் “கனமழை காரணமாக வழித்தடத்தில் வடிகால் நீர் பெருக்கெடுத்து ஓடியது மற்றும் 0.2 மீட்டர் உயரத்திற்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here