மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எஸ்ஓபி இல்லாமல் கொண்டாடப்படும் ஹரிராயா

இஸ்லாமியர்கள் இன்று மசூதிகள் மற்றும் சுராவ் நாடு முழுவதும் ஹரிராயா தொழுகைகளை நிறைவேற்றி நிரம்பிய ஒரு உயிரோட்டமான சியாவல் கொண்டாட்டத்தை கொண்டாடினர். இது மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக சிறப்பு நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) அமல்படுத்தப்படாமல் கொண்டாடப்படுகிறது.

கோலாலம்பூரில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா மஸ்ஜித் நெகாராவில் ஐதில்பித்ரி தொழுகையை நிறைவேற்றினர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் அரச தம்பதியினர் காலை 8.15 மணிக்கு மசூதிக்கு வந்தனர். கடந்த ஆண்டு, எஸ்ஓபி தளர்த்தப்பட்டு கோவிட் இறுதி கட்ட மாற்றமாக ஹரிராயா கொண்டாடப்பட்டது.

சிலாங்கூரில், சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா, தெங்கு அம்புவான் ஜெமா மசூதி புக்கிட் ஜெலுத்தோங்கில் காலை 8.13 மணிக்கு ஹரிராயா தொழுகையை நிறைவேற்றுவதில் ஆயிரக்கணக்கானோருடன்  இணைந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here