மூவாரில் தனியாக வசித்து வந்த முதியவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்

மூவாருக்கு அருகே உள்ள தாமான் பெர்டானாவில் ஜாலான் பெர்டானா 2ல் தனியாக வசித்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த 75 வயது முதியவரின் மருமகன் நேற்று இரவு 10.47 மணியளவில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்காத தவறியதால், அவரது நிலையை சரிபார்க்க மாமனாரின் வீட்டிற்குச் சென்றதாக மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் கூறினார்.

“பின்னர் மாமனாரது வீட்டில் துர்நாற்றம் வீசுவது குறித்து காவல்துறையினரிடம் அவரது மருமகன் தகவல் தெரிவித்தார் என்றும், குறித்த வீட்டின் வரவேற்பறையில் உள்ள படுக்கையில் முதியவர் இறந்து கிடந்தார் என்றும், அவர் பல நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது, ”என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here