கிள்ளான் பகுதியில் ஜாக்கிங் சென்ற பாடகர் நிட்சா அஃப்ஹாமைக் காணவில்லை

ஷா ஆலம்:

கிள்ளான் ஸ்டேடியத்தில் கடைசியாக இரவு 8 மணியளவில் ஜாக்கிங் செய்து கொண்டிருந்த 23 வயதான பாடகர் நிட்சா அஃப்ஹாம், காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

நேற்றிரவு (ஆகஸ்ட் 13) , அவரது காதலி அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதற்கு பின்னரே அஃப்ஹாம் காணாமல் போனதாக தாங்கள் உணர்ந்துகொண்டதாக அவரது சகோதரி, நூர் இர்பஹானி மொக்தார், 30, கூறினார்.

அவரை எல்லா இடங்களிலும் தேடிய பின்னர், அதிகாலை 3 மணிக்கு, குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்தனர்,” என்று அவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) நூர் இர்பஹானி கூறினார்.

23 வயதான பாடகர் ஏழு உடன்பிறந்தவர்களில் ஐந்தாவது பிள்ளை என்றும், அவருக்கு தனிப்பட்ட பகையோ அல்லது கடன் பிரச்சனைகளோ இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தென் கிள்ளான் OCPD துணை ஆணையர் சா ஹூங் ஃபோங் கூறினார் .

இந்நிலையில் காணாமல் போன பாடகர் முஹமட் நிட்சா அஃப்ஹாமின் கைபேசியும் பணப்பையும் இங்குள்ள கோத்தா பாலத்தில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காணாமல் போனவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், 03-3376 2222 என்ற எண்ணில் உள்ள தெற்கு கிள்ளான் காவல்துறை தலைமையகத்திற்கோ அல்லது அவர்களின் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ நேரடியாகப் பகிருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here