அலோர் ஸ்டாரில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட 28 வயது நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் -காவல்துறை

கெடா, அலோர் ஸ்டாரில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட 28 வயது நபர் பத்திரமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டாலும், கடத்தலுக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அஹ்மட் சுக்ரி மாட் அகீர் கூறினார்.

“இதுவரை கடத்தலுடன் தொடர்புடைய மொத்தம் நான்கு பேரை கைது செய்துள்ளோம்” என்று ஏசிபிஅஹ்மட் சுக்ரி கூறினார்.

சந்தேக நபர்கள் 39 மற்றும் 43 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் அவர்களில் மூவருக்கு மெத்தம்பேட்டமைன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

மேலும் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், சந்தேக நபர்கள் அனைவரும் ஆறு நாட்கள் காவலில் வைக்கப்படுவார்கள் என்றார்.

ஒரு நபரை மேலும் ஐந்து பேர் காரில் தூக்கிச் சென்று, தள்ளும் வீடியோ கடந்த செவ்வாயன்று சமூக ஊடகங்களில் பரவியது, 41 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், அந்த நபர் காரின் பின் இருக்கையில் அமரவைக்கப்பட்டபோது அவரைக் காப்பாற்றுமாறு வீடியோ எடுத்தவர் கூச்சலிடுவதையும் காட்டுகிறது.

இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 24) மாலை 6.30 மணியளவில், அலோர் ஸ்ட்டாரின் ஷாஹாப் பெர்டானாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்ததாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here