சிரம்பானில் உள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) தெற்கு நோக்கிச் செல்லும் KM 260.6 இல் அவசரப் பாதையில் பஞ்சராகி இருந்த தனது காரின் டயர் மாற்றி கொன்டிருந்த ஒரு பெண், கண்டெய்னர் லோரி மோதியதில் உயிரிழந்தார். புரோட்டான் X50 காரை ஓட்டிச் சென்ற 31 வயது பாதிக்கப்பட்டவரின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP அசாஹர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் காடோங்கிலிருந்து செனாவாங்கில் உள்ள தனது பணியிடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது காரின் பின்புற வலது டயர் பஞ்சராகி, அவசரப் பாதையில் நிறுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. அவர் டயரை மாற்றும்போது, இடது பாதையில் 24 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற ஒரு கண்டெய்னர் லோரி அந்தப் பெண் மீது மோதியது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 019-4611794 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நோர் ஃபட்ஜிலா முகமது ஜைனுதீனைத் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது விசாரணைக்கு உதவ அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.








