இடி அல்லது மின்னல் ஏற்படும் போது கால்பந்து மைதானங்கள் போன்ற திறந்தவெளியில் இருந்து விலகி இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சபா பேரிடர் மேலாண்மைக் குழு தலைவர் டத்தோஸ்ரீ சஃபர் உண்டோங் தெரிவித்தார்.
நேற்று பாடாங் பெக்கான் பாபரில் கால்பந்து விளையாடியபோது மின்னல் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த அறிவுரை வழங்கப்பட்டதாக மாநில செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க இடி அல்லது மின்னல் ஏற்படும் போது கால்பந்து மைதானம் போன்ற திறந்தவெளி பகுதிகளிலிருந்து விலகி இருங்கள் என்று அவர் கூறினார்.
முஹம்மது ஜுல்கில்ஃபில் ரெட்ஸ்வான் மாலை 4 மணியளவில் நடந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் அஸ்ஸி குஸ்யாரி 13, பலத்த காயமடைந்தார்.









