எரிப்பொருள் விலையில் அடுத்த 7 நாட்களுக்கான மாற்றம்

97, RON95 மற்றும் டீசல் விலைகளில் மாற்றமில்லை என்று நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. RON97 இன் விலை லிட்டருக்கு RM3.35 ஆகவும், RON95 லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும். இந்த விலைகள் மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும்.

நிதி அமைச்சகம், இன்று ஒரு அறிக்கையில், RON95 மற்றும் டீசலின் உச்சவரம்பு விலை லிட்டருக்கு முறையே RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும், இருப்பினும் சந்தை விலை தற்போதைய உச்சவரம்பு விலையை விட அதிகரித்துள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here