ஜாஹிட்: எதிர்க்கட்சி MPகளுக்கு ஒதுக்கீட்டை வழங்குவதற்கு அரசு கொள்கையளவில் ஒப்புதல்

பாலிங்: எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (MPகள்) ஒதுக்கீட்டை வழங்க ஒற்றுமை அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அவர்களின் நிர்வாக செலவுகளுக்கு மட்டுமே என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்

துணைப் பிரதம மந்திரி டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடி, இந்த விவகாரம் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும், அது குறித்த அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிடுவார் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில், நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட ஒதுக்கீட்டை வழங்க நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்று அவர் இன்று டேசா கெடா சடேக்கில் நடந்த தனது நடைபயண நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

எதிர்க்கட்சி MPகளுக்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்குமா என்று கேட்டபோது, ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சராகவும் இருக்கும் அஹ்மட் ஜாஹிட் கூறினார். இதற்கு முன்னதாக, எதிர்க்கட்சி MPக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த ஆரம்ப விவாதங்களின் போது பெரிகாத்தான் நேஷனல் (PN) எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று ஃபதில்லா கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதற்கிடையில், பாரிசான் நேஷனல் (BN) தலைவரான அஹ்மட் ஜாஹிட், கெடாவில் மாநிலத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு செயல்முறை குறித்து BN மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) இறுதிக் கட்ட விவாதத்தில் இருப்பதாக கூறினார். கெடாவில் தேர்தலுக்கான இடப் பங்கீட்டை இறுதி செய்து வருகிறோம். மற்ற (ஐந்து) மாநிலங்களுக்கு, நான் அங்கு இருக்கும்போது விஷயம் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here