இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நாடு முழுவதும் கனமழை பெய்யும் – மலேசிய வானிலை ஆய்வு மையம்

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நாடு முழுவதும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று மாலையில், கெடா, பினாங்கு, கிளாந்தான், திரெங்கானு மற்றும் பகாங்கில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.அத்தோடு பெர்லிஸிலும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“இந்த சூழ்நிலையானது மணிக்கு 50 கிலோமீட்டர் (கிமீ) வேகத்தில் பலத்த காற்று மற்றும் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலை சீற்றம் மற்றும் சிறிய படகுகளுக்கு ஆபத்தான கடல்களுடன் கொந்தளிப்பை ஏற்படுத்தும்” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியது.

இன்றைய வானிலையைப் பொறுத்தவரை, பிற்பகலில் பெர்லிஸ், பேராக், கெடா, பினாங்கு, கிளாந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், சபாவின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும், மேற்கு கடற்கரை மற்றும் கூடாட், தாவாவ் மற்றும் சண்டாக்கானில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும், அதே நேரத்தில் லாபுவானில் மழை பெய்ய வாய்ப்பில்லை.

சரவாக்கில், பெடோங், சரிகேய், சிபு, முகா மற்றும் பிந்துலு ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், காபிட், மிரி மற்றும் லிம்பாங் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here