நாளை கெடாவில் நடைபெறும் மலேசியா மடானி நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கெடா சுல்தான் கலந்துகொள்கிறார்

கெடா மாநிலத்தில் நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 29) நடைபெறவுள்ள மலேசியா மடானி நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கெடா சுல்தான், சுல்தான் சலேஹுதீன் சுல்தான் பத்லிஷா கலந்து கொள்கிறார்.

கெடா ஆட்சியாளர் வருகை தந்து, இந்த நிகழ்வை சிறப்பிக்க ஒப்புக்கொண்டதற்கு கூட்டரசு சார்பில் தாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக ஃபாமி ஃபாசில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நாளை அலோர் ஸ்டாரில் உள்ள ஹோட்டல் ராயாவில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here