Op Pantau: உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தால் RM60,200 மதிப்புள்ள 374 அபராதங்கள் விதிப்பு

கடந்த மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை மேற்கொள்ளப்பட்ட Ops Pantau 2023 நடவடிக்கையின்போது RM60,200 மதிப்புள்ள பல்வேறு வணிகக் குற்றங்களுக்காக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் (KPDN) 374 அபராதங்களை விதித்தது.

நாடு முழுவதுமுள்ள 66,701 இடங்களை ஆய்வு செய்ததன் மூலம், இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அதன் அமலாக்கத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ அஸ்மான் ஆடாம் தெரிவித்தார்.

அதே காலகட்டத்தில், பயனர்களிடமிருந்து மொத்தம் 1,127 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.

“இந்த Ops Pantau 2023 நடவடிக்கை ரமலான் பசார், ஐடில்ஃபித்ரி பசார், பொது சந்தைகள், ஈர சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் இணைய விற்பனை நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.

“வணிகர்களிடையே சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக இது செயல்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் மலேசியர்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைக்க இந்நடவடிக்கை உதவுகிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here