கோத்தா பாரு முஹம்மதி மசூதியில் பையை திருடியதாக நம்பப்படும் நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கடந்த புதன்கிழமை கோத்தா பாருவிலுள்ள முஹம்மதி மசூதியில் ஒரு நபருக்கு சொந்தமான பையை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை போலீசார் தேடுகின்றனர்.

நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலான 14 வினாடிகள் கொண்ட வீடியோவில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க, வெள்ளைச் சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்த சந்தேக நபர் ஒரு பையுடன் செல்வதைக் காணமுடிந்தது என்று கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ரோஸ்டி டாவூட் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் தனக்கு அருகில் குறித்த பையை வைத்துவிட்டு, தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் அதனை எடுத்துச் சென்றதாகக் கூறி காவல்துறையில் புகாரளித்தார்.

“சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அல்லது சந்தேக நபரைத் தெரிந்தவர்கள், போலீஸ் சார்ஜென்ட் முகமட் ஹபீஸ் முஹமட் கிலாவை 013-9529828 அல்லது 09-7752200 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here