காணாமல் போன 25 வயது பெண் சடலமாக கண்டெடுப்பு, கொலையாக இருக்கலாம் என போலீசார் விசாரணை

கோலாலம்பூர்:

டந்த புதன்கிழமை வாடிக்கையாளருக்கு வாடகைக் காரை டெலிவரி செய்துவிட்டு காணாமல் போன தஞ்சுங் மாலிமில் உள்ள ஒரு வாடகை கார் நிறுவன ஊழியர், உலு சிலாங்கூரில் உள்ள ஃபெல்டா கெடாங்சாவில் நேற்று இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

மாலை 6 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 25 வயதுடைய பெண், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.

உலு சிலாங்கூரில் உள்ள கம்போங் ஸ்ரீ கிளெடாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன நபருடையது என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இறகு தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 (கொலைக்காக) கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும், இது தொடர்பில் விரைவில் ஊடக அறிக்கை வெளியிடப்படும்,” என்றும் சொன்னார்.

சந்தேக நபர் 26 வயதுடைய அரச ஊழியர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ‘நூர் ஃபரா கர்தினி அப்துல்லா’ என்று அழைக்கப்படும் பாதிக்கப்பட்ட பெண் கடந்த வியாழன் அதிகாலை 1.56 மணிக்கு காணாமல் போனதாக அவரது வீட்டார் புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here