உட்லண்ட்ஸ் பாலத்தைக் கடந்ததும் வீசிய துர்நாற்றம்; நீரடைப்பு காரணத்தால் ஏற்பட்டது

சிங்கப்பூர் – மலேசியாவிற்குரிய இணைப்பு வழியான உட்லண்ட்ஸ் பாலத்தைக் கடந்ததும் அமைந்துள்ள ஜோகூர் சோதனைச்சாவடிக் கட்டடத்திலிருந்து வெளியேறும் இடத்தில் துர்நாற்றம் வீசுவதாக பல கிடைத்த புகார்களின் அடிப்படையில், அங்கு துப்புரவுப் பணிகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, துப்புரவுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்க் கசிவு காரணமாக துர்நாற்றம் வீசுவதாகவும் அது கழிவு நீர் அல்ல என்றும், இந்த துர்நாற்றம் அடைத்துக்கொண்ட நீர்த்தொட்டியால் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here