மான் என நினைத்து நண்பரை சுட்டுக்கொன்ற ஆடவரின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு

ஜெலேபுவில் மான் என நினைத்து தனது நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரின் தடுப்புக் காவல் உத்தரவு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

52 வயதான சந்தேகநபர் நேற்று வரை ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை மே 7ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் அனுமதித்ததாக ஜெலேபு மாவட்ட போலீஸ் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் மஸ்லான் உடின் தெரிவித்தார்.

“61 வயதான பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு காரணமான சந்தேக நபரின் ஆரம்ப விசாரணை இன்னும் தொடர்கிறது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் மான் என நினைத்து சந்தேகநபர் தனது நண்பரை வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.

சந்தேக நபர் அதே நாள் இரவு 10.30 மணியளவில் தித்தி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

ஏப்ரல் 25 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஜெலேபு, மூக்கா சவுக் வனப்பகுதியில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரின் உடல் எடுக்கப்பட்டது.

வேட்டையாட பயன்படுத்தப்பட்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இறந்தவருடையது எனவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here