கிளாந்தானில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்கின்றனர் குடியிருப்பாளர்கள்

பண்டிகைக் காலங்களைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக உள்ளூர் நுகர்வோர் மத்தியில் சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இந்நிலையில் கிளாந்தான் பகுதியில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குடியிருப்பாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

பெங்கலான் சேப்பாவைச் சேர்ந்த நுகர்வோரான ஐனி முஹமட் யூனோஸ், 71, கூறுகையில் தனது வீட்டில் சர்க்கரை தீர்ந்துவிட்டதாகவும், கடந்த மூன்று நாட்களாக பல மளிகைக் கடைகளில் சக்கரை அல்லது சக்கரைக்கு மாற்றீடான பொருட்களைத் தேடுவதாகவும், ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் கூறினார்.

“எனது சமையலில் சர்க்கரை மற்றும் பானங்களில் ஸ்டீவியாவை சேர்க்க வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.

கம்போங் பாங்கைச் சேர்ந்த சாத்தே விற்பனையாளர் சித்தி அமினா அவாங், 65, கூறுகையில், சுமார் 2,000 சாத்தே குச்சிகளை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 20 கிலோவுக்கு மேல் சர்க்கரை தேவை என்று கூறினார்.

“சர்க்கரை விநியோகத்தின் பற்றாக்குறை தனது வணிகத்திலும் தாக்கம் செலுத்துகிறது, ஏனெனில் சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களில் உள்ள முக்கிய பொருட்களில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கம்போங் லாண்டாக்கைச் சேர்ந்த மளிகைக் கடை நடத்துனர் செபியா இஸ்மாயில், 64, கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது கடையில் இருந்த சர்க்கரை அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறினார்.

இதற்கிடையில், கிளாந்தான் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) இயக்குனர், அஸ்மான் இஸ்மாயிலை தொடர்பு கொண்டபோது, மாநிலத்தில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளுக்கு நேற்று 250,000 கிலோ சர்க்கரை விநியோகித்ததாக கூறினார்.

“இந்த வழங்கல் (சர்க்கரை) அவ்வப்போது மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட, நிலைகளில் விநியோகிக்கப்படும்.

மேலும் “சர்க்கரை தட்டுப்பாடு பிரச்சனை இரண்டு நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

 

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here