மனநலம் குன்றிய நபர் என நம்பப்படும் ஒருவர் நேற்று, ப்ரிமா ஸ்தாப்பாக் சொகுசுமாடிக் குடியிருப்பின் B பிளாக்கின் 16வது மாடியில் உள்ள அவரது வாடகை வீட்டில் இருந்து, கீழே விழுந்து இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
40 வயதான உள்ளூர் நபர், ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தார் என்றும், அவரது சடலம் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ரெய்லிங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது என்றும் வங்சா மாஜூ மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் தனது தங்கையுடன் வசித்து வந்த வாடகை வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவர், மனநோயாளி என்றும், அவர் இறந்ததை சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்ததாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் ஆஷாரி நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.









