சர்க்கரை பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்ட கிளாந்தான் மற்றும் திரெங்கானுவில், அப்பிரச்சினையை நிவர்த்தி செய்ய தனது ‘Op Manis’ நடவடடிக்கையை உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் (KPDN) தொடங்கியுள்ளது.
இந்த சிறப்பு நடவடிக்கை இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு இரு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் என்று KPDN அமலாக்கத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ அஸ்மான் ஆடாம் தெரிவித்தார்.
பொறுப்பற்ற விற்பனையாளர்களால் சர்க்கரை விநியோகங்கள் மறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும், நுகர்வோர் பீதியடைந்து அளவிற்கு அதிகமாக வாங்குவதைத் தவிர்ப்பதும் Op Manis நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.
“மேலும் கிளாந்தான் எல்லையில் ஏதேனும் கடத்தல் நடவடிக்கைகள் உள்ளதா என்று தமது துறை கண்காணிக்கும் என்றார்.
“கிளாந்தான் மற்றும் திரெங்கானுவில் திட்டமிடப்பட்டபடி பொருட்கள் நுகர்வோரை சென்றடைவதை உறுதிசெய்ய அங்குள்ள KPDN அமலாக்கக் குழுக்கள், விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளும்,” என்று அவர் கோங் பாடாக்கில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் நடந்த ஆய்வின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.










