BN, PH இடையே மாநில அளவிலான இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிறார் ஜாஹிட்

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி (BN) மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே மாநில அளவிலான இட ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இந்த விஷயம் மத்திய மட்டத்திற்கு கொண்டு வந்து நன்றாக ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று அம்னோ தலைவருமான அவர் கூறினார்.

மேலும் “மாநில அளவில் தேர்தல்களில் தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதாக நான் நம்புகிறேன். BN கட்சிகளுக்கு இடையே எந்த ஆசனம் முடிவு செய்யப்படுகிறதோ, அது முதலில் கட்சிக்குள் முடிவு செய்யப்படும், ஏனெனில் PH இலும் அவ்வாறு செய்யப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் நேற்று இரவு மலாக்கா அம்னோவின் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அத்தோடு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், PH தலைவர் என்ற அடிப்படையில், ஒற்றுமை அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நாளை நடத்துவார் என்றும், பினாங்கு, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலத் தேர்தல்களுக்காக உறுப்புக் கட்சிகளின் தயார் படுத்தல்களைக் கேட்பார் என்றும் ஜாஹிட் கூறினார்.

BN மற்றும் PH ஆகியவை ஆறு மாநிலங்களில் போட்டியை குறைத்து மதிப்பிடவில்லை, ஏனெனில் தேர்தல்கள் ஒற்றுமை அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதை பிரதிபலிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here