செர்டாங் மருத்துவமனை சிலாங்கூர் சுல்தான் நினைவாக “மருத்துவமனை சுல்தான் இட்ரிஸ் ஷா செர்டாங்” என பெயர் மாற்றம்

சிலாங்கூர் சுல்தான் நினைவாக செர்டாங் மருத்துவமனையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது இப்போது “மருத்துவமனை சுல்தான் இட்ரிஸ் ஷா செர்டாங்” என்று அழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாநில ஆட்சியாளர் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, மருத்துவமனைக்கு தனது பெயரை வைத்ததற்காக மாநில அரசுக்கு தனது உரையில் நன்றி தெரிவித்தார்.

“உண்மையில், மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் எனக்கு முக்கியம், எப்போதும் இது என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்” என்று, அவர் நேற்று மருத்துவமனை சுல்தான் இட்ரிஸ் ஷா செர்டாங்கின் கேட்போர் கூடத்தில் நடந்த விழாவில் கூறினார்.

இந்த நிகழ்வில் சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின், சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா, சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ரட்ஸி அபு ஹாசன் மற்றும் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அமின் சா அஹ்மட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here