மியன்மாரில் நடக்கும் வன்முறைகள் குறித்து ஆசியான் தலைவர்கள் கவலை தெரிவிப்பு

மியன்மாரில் நடந்து வரும் வன்முறைகள், குறிப்பாக மனிதாபிமான உதவிகளை புரிபவர்கள் மீது நடத்தப்படும் ஆயுதம் ஏந்திய தாக்குதல்கள் குறித்து ஆசியான் மிகவும் கவலை கொண்டுள்ளதாக, இந்தோனேசியாவில் நடந்த 42-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

“அனைத்து வகையான வன்முறைகளையும் உடனடியாக நிறுத்தவும், மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வழங்குவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய உரையாடலை நடத்துவதற்கும் உகந்த சூழலை உருவாக்குவதற்கும் சக்தியைப் பயன்படுத்துவதற்கும் மியன்மாருக்கு ஆசியான் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்”.

மேலும், பேரிடர் மேலாண்மைக்கான ஆசியான் மனிதாபிமான உதவி ஒருங்கிணைப்பு மையம் (AHA மையம்) மற்றும் மியன்மாரில் உள்ள ஆசியான் கண்காணிப்புக் குழுவின் வாகனத் தொடரணி மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ தலைமையில் நடந்த மே 8 அன்று நடந்த கூட்டத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையை ஆசியான் தலைவர்களும் ஆதரித்தனர்.

“தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் மூளையாக செயல்பட்டவர் இதற்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும்” என்று ஆசியான் தலைவர்கள் கூறினர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட 8 ஆசியான் தலைவர்கள் இன்று நடைபெற்ற 42வது ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பிராந்திய அமைப்புக்கு பரஸ்பர நலன் சார்ந்த பல பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

இருப்பினும் மியன்மார் நாட்டு அரசுத் தலைவர் இம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here