அம்பாங் -ஸ்ரீ பெட்டாலிங் இடையிலான ஸ்டேஷன் பண்டாராயா, சுல்தான் இஸ்மாயில், PWTC, தித்துவங்சா, செந்தூல் மற்றும் செந்தூல் தீமோர் ஆகிய ஆறு இலகு ரயில் (LRT) நிலையங்களில் நாளை காலை 6 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.
பண்டாராயா எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் பழுதடைந்த ரயில் கட்டமைப்பு மற்றும் பாதையில் பழுது பார்ப்பு பணிகளின் முதற்கட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, குறித்த ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதாக Rapid Rail Sdn Bhd நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“சம்பந்தப்பட்ட நிலையங்கள் திறக்கப்படும் அதே நேரத்தில், LRT பேருந்து சேவைகள் 11, 13 மற்றும் 14 நிறுத்தப்படும்.
மேலும், பாதை கட்டமைப்பின் விரிவான பழுதுபார்க்கும் பணி (இரண்டாம் கட்டம்) அக்டோபர் நடுப்பகுதியில் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அது தெரிவித்துள்ளது.









