கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தில் நீர் விநியோகத்தடை

இன்று வெள்ளிக்கிழமை (மே 12) கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தில் (KKIA) நீர் விநியோகத்தடை ஏற்பட்டது.

எனவே கோத்தா கினாபாலுவுக்கு புறப்படுவதற்கு முன், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தங்கள் விமானங்களில் ஹவையான அளவு நீரை நிரப்புமாறு தெரிவிக்க வேண்டும் என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும் விமான நிலையத்தில் உள்ள உணவு மற்றும் பானங்கள் விற்பனை நிலையங்களும் பயன்படுத்திவிட்டு, வீசிவிடக்கூடிய பாத்திரங்களைப் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் சில கழிப்பறைகளை தற்காலிகமாக மூடுவோம், அதே நேரத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும் கழிப்பறைகளில் வைப்பதற்காக மினரல் வாட்டரை மொத்தமாக வாங்குகிறோம்.

“துரதிர்ஷ்டவசமான ஏற்பட்ட தடங்கலுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் சபா நீர் துறையின் புதுப்பிப்புகளை தொடர்ந்து வழங்குவோம்” என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் அதன் சமூக ஊடக தளங்களில் பதிவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here