மலாக்கா தஞ்சோங் மின்யாக்கில் தஹ்ஃபிஸ் மாணவர்களை துஷ்பிரயோகம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சிங்கப்பூர் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஹ்ஃபிஸ் மையத்தின் 40 வயதான நிறுவனர் மற்றும் அவரது சகோதரர் 36 வயதான விடுதிக் கண்காணிப்பாளரும், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 6 புகார்களைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக மலாக்கா காவல்துறைத் தலைவர் ஜைனோல் சமா தெரிவித்தார்.
இந்த மையத்தில் உள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆறு மாணவர்கள் நேற்று இரவு பாடாங் தீகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் தஞ்சோங் மின்யாக் தஹ்ஃபிஸ் மையத்தி வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
மூன்று மாணவிகள் மையத்தின் நிறுவனரிடம் வாய்வழி உடலுறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதாக ஜெய்னோல் கூறினார். மீதமுள்ளவர்கள் விடுதி வார்டனால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, சரியான நேரத்தில் மையத்தை சுத்தம் செய்யும் கடமையை முடிக்காததற்காக அறைந்து மிதித்து குத்தியதோடு சாட்டையால் அடித்தார்.
இந்த சம்பவங்கள் தஞ்சோங் மின்யாக் மற்றும் அலோர் காஜா மையத்திலும், கிளேபாங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திலும் பல முறை நடந்ததாகக் கூறப்பட்டது. இது கடைசியாக மே 7 அன்று நடந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாக அவர் கூறினார்.
தற்போதைக்கு, தஹ்ஃபிஸ் மையம் வழக்கம் போல் இயங்குகிறது. நிறுவனர் 2019 ஆம் ஆண்டில் உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் sodomy செய்ததற்காக முந்தைய குற்றப் பதிவைக் கொண்டுள்ளார் என்று அவர் கூறினார். சந்தேக நபர்களை காவலில் வைக்க நாளை மறுதினம் உத்தரவுக்கு போலீசார் விண்ணப்பிப்பதாக ஜைனோல் கூறினார்.








