பெசூட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மே 31க்கு முன் பேரிடர் நிவாரணம் வழங்கப்படும்

பெசூட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 5,391 குடும்பத் தலைவர்களுக்கு மே 31 க்கு முன் பேரிடர் நிவாரணம் வழங்கப்படும்.

மாநில அரசு முன்பு வாக்குறுதி அளித்தபடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா RM1,000 உதவியை வழங்கும் என்று, திரெங்கானு மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் சம்சூரி மொக்தார் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கோரிக்கைகள் அதிகமாக இருப்பதால் இந்த முறை வெள்ள உதவியில் சிறிது தாமதம் ஏற்பட்டது உண்மைதான். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உலு பெசூட் சட்டமன்றத் தொகுதியில் 2,364 குடும்பங்கள், ஜெர்தேஹ் சட்டமன்றத் தொகுதியில் 1,187 குடும்பங்கள் மற்றும் ஜாபி சட்டமன்றத் தொகுதியில் 664 குடும்பங்கள், கோத்தா புதேரா சட்டமன்றத் தொகுதியில் 613 குடும்பங்கள் மற்றும் குவாலா பெசூட்டில் 563 குடும்பங்களும் இந்த உதவியைப் பெறுவார்கள் என்றார்.

திரெங்கானுவில் வெள்ள நிவாரணப் பிரச்சினை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குறையாக மாறியுள்ளது, ஏனெனில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது விநியோகம் மிகவும் மெதுவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெள்ள நிவாரணம் கடந்த பிப்ரவரியில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டது, ஆனால் பெசூட் கடைசி மாவட்டமாக இருப்பதால் பல முறை தாமதமானது, அங்கு இதுவரை வெல்ல நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here