கடந்த மே 6 ஆம் தேதி, வடக்கு பட்டர்வொர்த் கொள்கலன் முனையத்தில் (NBCT) ஐரோப்பாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கொள்கலனில் இருந்து RM78 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 1,063.206 கிலோகிராம் எக்ஸ்டசி மாத்திரைகளை தேசிய சுங்கத்துறை கைப்பற்றியது.
தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில், அவரது ஆட்கள் காலை 9 மணிக்கு NBCT இல் கண்டெய்னரை ஆய்வு செய்து, 48 வயதான ஒரு ஷிப்பிங்முகவரையும் கைது செய்தனர் என்றும், மாற்றியமைக்கப்பட்ட கொம்ப்ரேசர் பெட்டிகளில் குறித்த போதைப்பொருட்களை மறைத்து வைத்து கடத்தியதாகவும், அதன் டைரக்டர் ஜெனரல் டத்தோ ஜாசுலி ஜோஹன் கூறினார்.
இதுவே இந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கண்டுபிடிப்பு” என இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.









