சிலாங்கூர் மாநிலத்தின் கிராமப்புற சாலைகளை சீரமைப்பதற்காக மாநில அரசுக்கு 20 இலட்சம் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி அறிவித்தார்.
சிலாங்கூரில் உள்ள பண்ணைகள் மற்றும் தோட்டங்களுடன் இணைக்கப்பட்ட கிராமங்களில் உள்ள சாலைகளை சீரமைக்க, கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தினால் இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்றார்.
“நாங்கள் அடையாளம் கண்டுள்ள பெரும்பாலான இடங்கள் சபாக் பெர்னாமில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்








