UniSZA ஏரியில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்..!

எல் நினோ நிகழ்வால் இங்குள்ள காங் பாடாக்கில் உள்ள சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழக (UniSZA) ஏரியில் நேற்று முதல் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

குறித்த “ஏரி நீர் மாதிரியை நாங்கள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம், அதில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம் என்றும், இறந்தவற்றில் பெரும்பாலானவை திலாப்பியா மீன் இனங்கள் என்றும், UniSZA இன் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் (Eseri) ஆராய்ச்சி ஃபெலோ, டாக்டர் ஃபதுர்ரஹ்மான் லனானன் கூறினார்.

“அருகிலுள்ள வீட்டுத் தோட்டங்களின் வடிகால் அமைப்பிலிருந்து வீட்டுக் கழிவு நீர் வருவதே இதற்குக் காரணம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

அத்தோடு “எல் நினா நிகழ்வு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அதிக வெப்பமான வானிலை ஏரியின் மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரித்தது, இதனால் தண்ணீரில் ஆக்ஸிஜனின் சேமிப்பு திறன் குறைகிறது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here