பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில் வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன- நான்சி

பணியிடத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, வேலை வாய்ப்புச் சட்டம் 2022-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.

இந்த திருத்தங்களில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 60லிருந்து 98 நாட்களாக உயர்த்துவது மற்றும் கர்ப்பமாக இருக்கும் அல்லது கர்ப்பத்தால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முதலாளிகள் எப்பொழுதும் அவ்விடங்களில் அவை தொடர்பான அறிவிப்பைக் காட்சிப்படுத்த வேண்டிய தேவைகள் உள்ளன, ஏனெனில் இது அங்கு வேலைசெய்யும் பெண்களையும் ஆண்களையும் பாதுகாப்பாக உணர வைப்பதற்கு மிக முக்கியம்” என்று நான்சி கூறினார்.

மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பெண்களை மீண்டும் பணியில் சேர்ப்பதை ஊக்குவிக்க, தொழிலாளர்களின் காப்பீடு செய்யப்பட்ட சம்பள மதிப்பில் 80%க்கு சமமான குழந்தை பராமரிப்பு மானியங்களை வழங்குவதற்கு சமூக பாதுகாப்பு அமைப்பின் (Socso) திருத்தங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

மகப்பேறு விடுப்புக்குப் பிறகு வேலைக்குத் திரும்பிய சுமார் 130,000 பெண்கள் மானியத்தின் மூலம் பயனடைவார்கள் என்று நான்சி மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here