2019 ஆம் ஆண்டு முதல் கிளாந்தான் சுங்கத்துறையால் 3.32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கிளாந்தான் சுங்கத் துறையினர் மொத்தம் RM3.32 மில்லியன் மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் மற்றும் கஞ்சாவை ஆகிய போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று, அதன் இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லாங் தெரிவித்தார்.

அனைத்து பறிமுதல்களும் மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்ட எட்டு வழக்குகளில் இருந்து வந்தவை என்று அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 2.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 271,305 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளும், 620,000 ரிங்கிட் மதிப்புள்ள 248 கிலோகிராம் கஞ்சாவும் அடங்குவதாக, அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க நாட்டின் அனைத்து நுழைவு பாதைகள் மற்றும் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை தமது துறை தீவிரப்படுத்தி வருகிறது என்றார்.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுங்கத்துறையைக் கட்டண செலுத்தாத தொலைபேசி எண் 1-800-88-8855 அல்லது அருகிலுள்ள சுங்க அலுவலகத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் எந்தவொரு கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பரிமாறுவதன் மூலம், பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் ஒவ்வொரு தகவல் தருநர்களின் அடையாளமும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here