சொக்சோவிடம் (Perkeso) போலியான விவரங்களைக் கொண்ட பணம் கோரல் ஆவணங்களைச் சமர்ப்பித்த சந்தேகத்தின் பேரில், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
பெர்கேசோவின் பொருளாதார ஊக்கிவிப்பு (Penjana 2.0) திட்டத்தின் இன் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆவணத்தில், சுமார் RM250,000 மதிப்புள்ள பணம் உரிமை கோரப்பட்டது.
MACC இன் ஆதாரத்தின்படி, நான்கு சந்தேக நபர்கள், 29 மற்றும் 63 வயதுடையவர்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர், அவர்கள் வாக்குமூலங்களை வழங்க வந்த பின்னர், நேற்று நண்பகல் 3 மணியளவில் திரெங்கானு MACC வளாகத்தில் வைத்து அனைவரும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களில் இருவர் முகாமையாளர்கள் என்றும், ஒருவர் திறன் மேம்பாட்டு சேவைகளில் ஈடுபட்டுள்ள நிர்வாகத் தலைவர் என்றும், மற்றவர் கணினி நிறுவன உரிமையாளர் என்றும் அறிய முடிகிறது.
இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த புலனாய்வு இயக்குனர், டத்தோஸ்ரீ ஹிஷாமுதீன் ஹாஷிமை தொடர்பு கொண்டபோது, குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்தியதுடன், எம்ஏசிசி சட்டம் 2009ன் பிரிவு 18ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.









