ஆந்திரா முதல்வரை விமர்சித்த யூடியூபர்கள் கைது – நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணை விமர்சித்த யூடியூபர்கள் அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை இயல்பாக வெளிப்படுத்தும் திறமையால் தனி அடையாளம் பெற்றவர். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துவருகிறார். மேலும், இன்னும் சில நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் தனது கருத்தை வலுவாக வைக்கக்கூடியவராக வலம் வருகிறார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணை விமர்சித்த யூடியூபர்கள் அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் “ ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணை விமர்சித்த யூடியூபர்களுக்கு ஜாமீன் வழங்கியும் மீண்டும் மீண்டும் வழக்குகள் போட்டு கைது செய்வது அதிகார துஷ்பிரயோகம். 30 வழக்குகள் வரை தயார் செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது வெட்கக்கேடானது. மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களை விடுதலை செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here