பல் மருத்துவ சந்திப்புகளை இப்போது MySejahtera வழியாக மேற்கொள்ளலாம் -சுகாதார அமைச்சகம்

சுகாதார அமைச்சகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இணையம் மூலம் பல் மருத்துவ சந்திப்புகள் இப்போது MySejahtera வழியாக மேற்கொள்ளலாம் என்று, சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது சேவையை வழங்குவதையும் பல் கிளினிக்குகளுக்கான அணுகலையும் மேம்படுத்தும் என்றும், அதே நேரத்தில் நேரடியாக வரும் நேயாளர்களின் விருப்பமும் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த முயற்சியின் மூலம், பொதுமக்கள் தங்களின் பல் பரிசோதனைகளை முன்பதிவு செய்து, பல் மருத்துவ வசதிகளுக்கான வருகையைத் திட்டமிடலாம்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here