எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவருடன் நட்பாக இருந்ததை ரவிச்சந்திரன் விவரித்தார்

“இந்த ஆண்டு, எவரெஸ்ட் எங்களைத் தோற்கடித்தது,”என்கிறார் தேசிய அணியில் தனியாக மலையேறுபவரான டி ரவிச்சந்திரன். அவர்  மறைந்த லெப்டினன்ட் கர்னல் அவாங் அஸ்கந்தர் அம்புவான் யாக்கூப் மற்றும் காதுகேளாத மலையேறுபவர் ஹவாரி ஹாஷிம் இமயமலையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.

56 வயதான அவாங் அஸ்கந்தர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது தவறி விழுந்து இறந்தது உறுதிசெய்யப்பட்டது. அதே நேரத்தில் 33 வயதான ஹவாரி 8,848 மீ உயரமுள்ள உலகின் மிக உயரமான மலையின் உச்சியை அடைந்து 4ஆவது முகாமில் இருந்து கீழே இறங்கும் போது தொலைந்து போனதாக அஞ்சப்பட்டது.

இந்த நேரத்தில், நான் அவர்களுக்கு முன்னால் இருந்தேன். நான் எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது தீவிர வானிலையின் கடுமையான சவால்களை எதிர்கொண்டேன் என்று இன்று KLIA இல் நாடு திரும்பியபோது  பெர்னாமாவிடம் கூறினார்.

மே 17 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததாகவும், தேசிய கொடி மற்றும் அவரது உதவிக்கரம் நீட்டியவர்களின் கொடியை மலையில் அசைத்ததாகவும் ரவிச்சந்திரன் கூறினார்.

அவர் அடுத்த நாள் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து லோட்ஸே (உலகின் நான்காவது உயரமான மலை, 8,516 மீ உயரத்தில்) ஏறத் தொடங்கினார். ஆனால் விரலில் பனிக்கட்டி காரணமாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காட்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

58 வயதான ரவிச்சந்திரன் 24 மணி நேரத்திற்குள் எவரெஸ்ட் சிகரத்தில் கொடியை உயர்த்திய பின்னர், லோட்சே சிகரத்தின் உச்சியை வென்ற முதல் மலேசிய ஏறுபவர் என்ற சாதனையை படைத்தார். ரவிச்சந்திரன் உச்சத்தை எட்டுவது இது நான்காவது முறையாகும்.

அவாங் அஸ்கந்தரையும், ஹவாரியையும் எவரெஸ்ட் அடிவார முகாமில் அடிக்கடி சந்தித்து ஓய்வெடுத்தையும் ரவிச்சந்திரன் கூறினார். மலை ஏறுபவர்கள் பொதுவாக நட்பாக இருப்பார்கள். ஐந்து மலேசியர்கள் மட்டுமே இருந்தனர் என்று குறிப்பிட தேவையில்லை. அதனால் இனம், மதம், வயது வித்தியாசம் இல்லாமல் குடும்பம் போல் மிக நெருக்கமாக இருந்தோம்.

எவரெஸ்ட் சிகரத்திற்குச் செல்லும் நாளில், ஹவாரி என்னுடன் கூடாரம் 1 முதல் கூடாரம் 2 வரை இருந்தார். அவர் வாய் பேச முடியாதவராக இருந்தாலும், காது கேளாதவராக இருந்தாலும் அவர் ஒரு சிறந்த மனிதர். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், நாங்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொள்வோம் என்று அவர் கண்களில் கண்ணீருடன் கூறினார்.

வானிலை காரணமாக தேடுதல் பணி மிகவும் சவாலானதாக இருந்தாலும் ஹவாரி பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார். மலேசிய எவரெஸ்ட் ஏறுபவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு தவறும் உலகின் மிக உயரமான மலையைக் கைப்பற்றும் பணியில் உள்ள அபாயங்களைக் குறைக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரவிச்சந்திரன் கூறினார். எவரெஸ்ட் சிகரத்தை கைப்பற்றும் போது ஏற்படும் அபாயங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here