கிளாந்தான் – தாய்லாந்து போலீசார் இணைந்து கடத்தல் தடுப்பு நடவடிக்கை

எல்லை தாண்டிய குற்றங்களை, குறிப்பாக போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் கடத்தல் ஆகியவற்றைச் சமாளிக்க தாய்லாந்து போலீஸ் அதிகாரிகளுடன் கிளாந்தான் போலீசாரும் ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.

எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்களும் தாய்லாந்தில் உள்ள தங்கள் சகாக்களுடன் தொடர்புடைய தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் கூறினார்.

“உதாரணமாக, தானா மேரா காவல்துறைத் தலைவர் எப்போதும் வாங் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருடனும், பாசீர் மாஸ் – சுங்கை கோலோக் மாவட்டத்துடனும், தும்பாட் – தக்பாய் மாவட்டத்துடனும் மற்றும் ஜெலி -புக்கேட்டா மாவட்ட காவல்துறையுடனும் எப்போதும் தொடர்பில் இருப்பர் என்றார்.

“இரண்டு நாட்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான இந்த திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தும் கும்பல்களின் முயற்சிகளை முறியடித்துள்ளன” என்று அவர் நேற்றிரவு இங்குள்ள தும்பாட் போலீஸ் தலைமையகத்தின் ஐடில்பிட்ரி திறந்த இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here