கோலாலம்பூர்: மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் திருடப்பட்ட பணத்தை குறுகிய காலத்தில் திரும்பப் பெறும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CPC) திருத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே நீதிமன்றப் பத்திரம் மூலம் இதை சாத்தியப்படுத்த முடியும் என்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக தங்கள் பணத்தை திரும்பப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் நீதிமன்ற வழக்கிற்கு (சிறிது காலத்திற்கு) கால அவகாசம் தேவைப்படுகிறது என்று மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி நேரத்தின்போது டான் ஹாங் பின் (PH-Bakri) என்பவரின் துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
பேங்க் நெகாரா மலேசியா அனைத்து வங்கிகளையும் 24 மணி நேரமும் செயல்படுமாறும், பாதிக்கப்பட்டவர்கள் மோசடியின் ஆன்லைன் பரிவர்த்தனைகளை உடனடியாக நிறுத்துவதை உறுதிசெய்ய ஆட்டோமேஷனை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தியுள்ளதாக அன்வார் கூறினார்.









